“வதந்திகளை பரப்ப வேண்டாம்; கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்”! போட்டோ வெளியிட்டு பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரப்பப்படுகிறது. இன்று மாலை கூட ஏராளமான போலீசார் மருத்துவமனையை சுற்றி குவிக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவியது. இது அரசியல் வட்டாரத்திலும் திரையுலக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட அவருடைய மனைவி பிரேமலதா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
“வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”
இன்று கூறியுள்ளார்.