25 வருடம் கழித்து ரீ ரிலீஸ்: 25 நாட்களில் 25 கோடி வசூலித்த ” படையப்பா”! படக்குழுவினருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த ரஜினிகாந்த்!! பார்ட் – 2 வருமா?

25 வருடம் கழித்து ரீ ரிலீஸ்: 25 நாட்களில் 25 கோடி வசூலித்த ” படையப்பா”! படக்குழுவினருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த ரஜினிகாந்த்!! பார்ட் – 2 வருமா?

ரஜினிகாந்த் தயாரித்து நடிக்க கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 25 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் படையப்பா. இதில் சிவாஜி கணேசன் செளந்தர்யா ரம்யா கிருஷ்ணன் நாசர் மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சுமார் 25 வருடங்களுக்கு பிறகு, தனது 50 வருட திரைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது பிறந்த நாளான கடந்த 12.12.2025 அன்று படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்தார். உலகம் முழுவதும் படத்தை வெளியிடும் பொறுப்பை இப்படத்தின் இணைத் தயாரிப்பாளரும், பல படங்களை தயாரித்தவரும் நடிகருமான பி.எல்.தேனப்பன் வசம் ஒப்படைத்தார் ரஜினி.

அனுபவம் வாய்ந்தரான தேனப்பன் படத்தின் சவுண்ட் மிக்ஸிங் , கலர் கரெக்ஷன் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்து புதுப்படம் போல மெருகேற்றி உலகம் முழுவதும் சுமார் 800 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார். யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு. புதுப்படங்களே சில நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் தாக்குப் பிடிக்க முடியாத சூழலில் பல தியேட்டர்களில் 25 நாட்களை நிறைவு செய்து சாதனை படைத்தது படையப்பா.

இதன் மூலம் சுமாராக 25 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.

இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த ரஜினி, படத்தின் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் தேனப்பன் ஆகியோரை தன் இல்லத்திற்கு வரவழைத்து பூங்கொத்து வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

படையப்பா படப்பிடிப்பின் போது நடைப்பெற்ற சம்பவங்களை நினைவு படுத்தி சிரித்து மகிழ்ந்தார். ரஜினி வீட்டிலேயே விருந்தும் அளிக்கப்பட்டது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை “நீலாம்பரி” (படையப்பா பார்ட் 2) என்ற பெயரில் எடுக்க விரும்புவதாக ஏற்கனவே ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அதைப் பற்றி பேசப்பட்டதா? ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா? என்பது மட்டும் சஸ்பென்ஸ்.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *