நாடார் மகாஜன சங்கம் நடத்திய காமராஜர் விழா! நடிகர் லெஜண்ட் சரவணன் பரிசு வழங்கினார்!!

நாடார் மகாஜன சங்கம் நடத்திய காமராஜர் விழா!  நடிகர் லெஜண்ட் சரவணன் பரிசு வழங்கினார்!!

 

விருதுநகர் மாவட்டத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், தயாரிப்பாளரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் கலந்து கொண்டு, பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளி நிறுவனங்களில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.30,000, மூன்றாம் பரிசாக ரூ.20,000 வழங்கப்பட்டது.

மேலும், பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி நிர்வாகங்களைச் சேர்ந்த 30 பேருக்கு வெள்ளி ஷீல்டுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *