பெப்சி தலைவராக ஆர் கே செல்வமணி 5-வது முறையாக தேர்வு! துணை தலைவரானார் தினேஷ் மாஸ்டர்!!
தென்னிந்திய திரையுலகில் இயங்கி வரும் இயக்குநர்கள் ஒளிப்பதிவாளர் கள் எழுத்தாளர்கள் ஒப்பனையாளர்கள் ஸ்டண்ட் கலைஞர்கள் நடன இயக்குநர்கள் உள்ளிட்ட 23 சங்கங்களின் கூட்டமைப்பு தான் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம். ( FILM EMPLOYEES FEDERATION OF SOUTH INDIA – FEFSI )
சுருக்கமாக “பெப்சி” என்றழைக்கப்படும் இந்த தாய் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ( 2026 – 2029)
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து ஐந்தாவது முறையாக இயக்குநர் ஆர் கே செல்வமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய FEFSI நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இன்று எளிமையாக நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கு, திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர் வி உதயகுமார், நடிகர் ரவிமரியா ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ” பெரும் நஷ்டத்தில் இயங்கும் தமிழ் திரைப்பட துறையை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தி செல்ல தமிழக முதல்வர் விஜய் உதவி செய்ய வேண்டும். மத்திய அரசு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NATIONAL FILM DEVELOPMENT CORPORATION) என்ற அமைப்பை ஏற்படுத்தி இருப்பது போல தமிழ் நாடு அரசு தமிழ் திரைப்பட வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார் ஆர் கே செல்வமணி.
புதிய நிர்வாகிகள்:
தலைவர்:
திரு. R.K. செல்வமணி
பொதுச் செயலாளர்:
திரு. B.N. சுவாமிநாதன்
பொருளாளர்:
திரு. S.P. செந்தில்குமார்
துணைத் தலைவர்கள்:
திரு. S. அசோக் மேத்தா
திரு. R. மோகன மகேந்திரன்
திரு. V. தினேஷ் குமார்
திரு. K. அசோக் குமார்
திரு. G. ராமலிங்கம்
இணைச் செயலாளர்கள்:
திரு. A. புருஷோத்தமன்
திருமதி. A. ஷாஜிதா
திரு. R.S. ராஜா
திரு. G. கிருபானந்தன்
திரு. S. பாபு

