தமிழகத்திற்கு 23 புதிய மந்திரிகள்: விஜய்யின் அமைச்சரவை விரிவாக்கம்! செங்கோட்டையன் இலாகா மாற்றம்!!

தமிழகத்திற்கு 23 புதிய மந்திரிகள்: விஜய்யின் அமைச்சரவை விரிவாக்கம்! செங்கோட்டையன் இலாகா மாற்றம்!!

 

கடந்த மே பத்தாம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர், நடிகர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதை தொடர்ந்து இன்று தமிழ் நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் இருக்கும் நிலையில் இன்று புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் தவெக சார்பில் 21 பேரும், காங்கிரஸ் சார்பில் 2 பேரும் அமைச்சர்களாகினர்.
கவர்னர் மாளிகையில் (லோக் பவன்) நடைபெற்ற விழாவில் அனைவருக்கும் கவர்னர் அர்லோகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்னகவே இருந்த அமைச்சர்களுக்கு இடையே இலாகா மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
அமைச்சர் செங்கோட்டையனினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதித்துறை ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.ஏ. செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் – வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, பூமிதானம், கிராமதானம் மற்றும் சட்டமன்றம்.

வனத்துறை – காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார்

பால்வளத்துறை – குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி

கால்நடைத்துறை – அவிநாசி எம்.எல்.ஏ. கமலி

வேளாண் துறை – கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்

சுற்றுச்சூழல் துறை – திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவ்

வீட்டுவசதித்துறை – கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார்

கூட்டுறவுத்துறை – அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்

சிறு,குறு, நடுத்தர தொழில்துறை – ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன்ராஜா

சமூகநலன், மகளிர் நலத்துறை – ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி

சுற்றுலாத்துறை – கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார்

கைத்தறி, ஜவுளித்துறை – ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜி

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை – ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

AI, தகவல் தொழில்நுட்பத்துறை – வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார்

வெளிநாடுவாழ் தமிழர் நலன் – ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார்

தொழிலாளர் நலத்துறை – அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸ்

மனிதவளத்துறை – தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார்

மீன் வளத்துறை – தூத்துக்குடி எம் எல் ஏ நடிகர் ஸ்ரீநாத்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளின் சதவீதம் அடிப்படையில் 35 மந்திரிகள் வரை நியமிக்கப்படலாம். அந்த வகையில் பார்த்தால் ஏற்கனவே இருக்கும் ஒன்பது அமைச்சர்களுடன் இன்று பதவி ஏற்கும் 23 பேரையும் சேர்த்து 32 அமைச்சர்கள் உள்ளனர். இதில் இரண்டு பேர் காங்கிரஸ் அமைச்சர்கள்.

விஜய்யின் அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் திமுக கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா ஒரு மந்திரி பதவி பேசி முடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி விஜய்யின் மந்திரி சபையில் அதிகபட்சமாக நான்கு பெண்கள், ஏழு தலித்துகள், மூன்று நாடார்கள், இரண்டு பிராமணர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது மிகச் சரியான சமூக நீதியாக பார்க்கப்படுகிறது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *