சென்னை மாணவிக்கு பெங்களூரில் “நாட்டிய மயூரி” விருது!

சென்னை மாணவிக்கு பெங்களூரில் “நாட்டிய மயூரி” விருது!

பெங்களூரில் பிரபலமான நந்தகோகுல நடன பள்ளி சார்பில், மே 2 ஆம் தேதி அன்று நிரித்யவசந்தோத்சவம் என்ற நாட்டிய விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து நாட்டியபள்ளி மாணவிகள் பங்கேற்றனர். ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் நாட்டிய திறமைகளை மேடையில் வெளிப்படுத்தினர். சிறப்பாக நடனமாடிய மாணவிகளை சிறப்பிக்கும் வகையில் விருதுகளும் பட்டையங்களும் வழங்கப்பட்டன. சென்னையிலிருந்து தாராஸ் பரத நாட்டியாலயா சார்பில், குரு திருமதி. தாரா சந்திரசேகர் அவர்களின் மாணவி செல்வி. M. ஸ்ரீநிவாஷினியும் இவ்விழாவில் பங்கேற்று மிக நேர்த்தியாக அழகான முகபாவனைகளுடன் அபிநயம் பிடித்து பரதம் ஆடினார். அவருக்கு, கலை இயக்குநர் குரு M கஸ்தூரி தனுஷ் மற்றும் நிர்வாக இயக்குநர் S.தனுஷ் முன்னிலையில், நிறுவனர் M.கவிதா மகேந்திரன் கைகளால் “நாட்டியமயூரி” என்ற பட்டமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. சினிமா டப்பிங் ஆர்டிஸ்ட் சுதாவின் மகளான ஸ்ரீநிவாஷினி தொடர்ந்து தமிழ் நாட்டின் பல்வேறு மேடைகளில் தனது திறமையை அரங்கேற்றி கைத்தட்டல்களை பெற்று வருகிறார்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *