“ஜனநாயகன்” 9 – ம் தேதி ரிலீஸ் ஆகுமா? சென்சார் சான்றிதழ்  வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு! மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கவில்லை!! விஜய் ரசிகர்கள் டென்ஷன்!!!

“ஜனநாயகன்” 9 – ம் தேதி ரிலீஸ் ஆகுமா? சென்சார் சான்றிதழ்   வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு! மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கவில்லை!!  விஜய் ரசிகர்கள் டென்ஷன்!!!

விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என்று பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு பிரமோஷன், இசை வெளியீட்டு விழா வரை நடத்தப்பட்டுள்ளது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ரிலீசாகும் படம் என்பதால் இந்த படத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை தாக்கியும் கடுமையாக விமர்சனம் செய்தும் காட்சிகள் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.ஆனால்

தற்போது வரை ஜனநாயகன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இன்னும் முன்பதிவு தொடங்கப்படவில்லை தனித் திரையரங்குகளில் மட்டுமே முன்பதிவு பரபரப்பாக நடந்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதமே படம் சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு காண்பிக்கப்பட்டு விட்டது. அவர்கள் ஆட்சேபனைக்குரிய காட்சிகளையும் வசனங்களையும் நீக்க சொல்லி பட நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். அவர்களும் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் வசனங்களையும் நீக்கிவிட்டு மீண்டும் கடந்த டிசம்பர் 19-ம் தேதி சமர்ப்பித்து விட்டனர். ஆனால் இன்று வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை.

சுமார் 350 கோடியில் எடுக்கப்பட்டு 450 கோடி வரை வியாபாரம் செய்யப்பட்டுள்ள இந்த படம் திட்டமிட்டபடி உலகம் முழுவதிலும் ரிலீஸ் ஆகவேண்டுமே என்று பதற்றம் அடைந்த தயாரிப்பு நிறுவனம்,

ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஆஷா இந்த வழக்கை விசாரித்த போது, சென்சார் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “இப்படத்தில் மத உணர்வுகளை புண் படுத்தும் விதத்தில் காட்சிகள் உள்ளதாக புகார் வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சி உள்ளதாக வந்துள்ள புகாரை தாக்கல் செய்ய தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு ( 7 ம் தேதி) தள்ளி வைத்தார்.

நாளை பிற்பகல் 2:15 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் தாக்கல் செய்யும் மனுவைப் பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தின் விளம்பரங்கள் வேறு பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பதால் விஜய் ரசிகர்கள் கடும் டென்ஷனில் சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கிடையே வெளிநாடுகளில் சென்சார் செய்வதற்கு ஏற்ப ஜனநாயகன் பட கன்டென்ட் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் சென்சார் ஆன பிறகே ஆந்திர கர்நாடகாவில் தணிக்கை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை தாமதமானால் வெளிநாடுகளில் ஒன்பதாம் தேதியும் இந்தியாவில் பத்தாம் தேதியும் படம் வெளியாகும் சூழ்நிலை கூட உருவாகலாம் என்று திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *