தர்மத்தை நிலைநாட்டும் தீர்ப்பை விமர்சிப்பதா? அமைச்சர் ரகுபதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்! பாஜக ஏ.என்.எஸ். பிரசாத் ஆவேசம்!!

தர்மத்தை நிலைநாட்டும் தீர்ப்பை விமர்சிப்பதா?  அமைச்சர் ரகுபதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்! பாஜக ஏ.என்.எஸ். பிரசாத் ஆவேசம்!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ என் எஸ் பிரசாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

உயர்நீதிமன்ற அமர்வு கொடுத்த தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பாக மேல்முறையீடு செய்வோம் என்று ஒற்றை வார்த்தையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை சட்டப்படி அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால் சட்ட அமைச்சர் ரகுபதி, இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக, நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கும் வகையில், தவறாக சித்தரிக்கும் வகையில், நீதிபதி இந்த

விளக்கு தூணில் தீபம் எரிந்ததை உறுதி செய்து தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும் என்று உள்நோக்கத்துடன் தீர்ப்பின் தன்மையை விமர்சித்து, ஒரு தீர்ப்பு எப்படி வழங்க பட வேண்டும் நீதிமன்றத்திற்கும் நீதிபதிக்கும் அறிவுரை கொடுக்கும் வகையில், சட்டத்தை மீறி நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தது நீதிமன்ற அவமதிப்பாகும்.

சுடுகாட்டிற்கும் கோவிலுக்கும் வித்தியாசம் தெரியாமல் தவறான உதாரணங்களை பேசி,

நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு எதிராக,, நீதிபதிகளையும் நீதிமன்றத்தை அவமதித்து

இந்திய அரசியல் சாசன சட்டத்தை மீறி உள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ரகுபதி அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டசெய்ய

தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தர்மத்தை நிலை நாட்டும் தீர்ப்பை, மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில், தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் வகையில் உயர் நேர்மையுடன் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் அப்பீலுக்கு செல்வோம் என்று சட்ட அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது அப்பட்டமான மதவாத அரசியலின் வெளிப்பாடு.

சிறுபான்மை வாக்கு வங்கிக்காக தமிழகத்தில் மதவாத அரசியலை பிரிவினைவாத அரசியலை செய்து சமூக ஒற்றுமை சீர்குலைக்கும் வகையில், வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக அரசு செயல்படுவது துரதிஷ்டவசமானது.

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் ஆரம்பம் முதல் திருப்பரங்குன்றம் கோவில் வரலாற்றை ,இந்துமத ஆகம விதிகளை திரித்து பொய் தகவல்களை அளித்து அவதூறு பிரச்சாரம் செய்து, இந்து மதத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் எதிராக அறநிலைத்துறை செய்த, அனைத்து தவறுகளுக்கும் முழு முதல் காரணமாக செயல்பட்ட அமைச்சர் சேகர்பாபு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்துவிலக வேண்டும்.

அறிஞர் அண்ணா திமுக கட்சிக்கு வகுத்து தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், தமிழக முதல்வர்

மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொண்டு,

மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகம் சீரும் சிறப்புடன் தழைத்தோங்க, மத நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உச்ச நீதிமன்றம் சென்று அப்பீல் செய்வோம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏ.என்.எஸ்.பிரசாத்

கைப்பேசி: 9840170721

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *