பாரதிராஜா பற்றி வதந்திகளை பரப்பாதீர்கள்! நேரில் பார்த்த பின் திரைப்பட இயக்குநர்கள் வேண்டுகோள்!!
இயக்குனர் பாரதிராஜா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை குறித்து அடிக்கடி தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் திரைப்பட இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி, ஏ ஆர் முருகதாஸ், லிங்குசாமி, சீமான், அமீர், சித்ரா லட்சுமணன், மாதேஷ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு , சீனு ராமசாமி, மனோஜ்குமார், சாட்டை துரைமுருகன் உட்பட பலர் இன்று எம் ஜி எம் மருத்துவமனைக்கு சென்று பாரதிராஜாவை பார்த்து விட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் பேசி விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் இது தொடர்பாக அவர்கள் ஒரு வீடியோவும் வெளியிட்டனர். அந்த வீடியோவில் “பாரதிராஜா உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்… முடிந்தால் அவர் சீக்கிரம் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
![]()

