சுவாமி சாய் ரவிச்சந்திரன் தயாரிக்கும் “கண்கண்ட தெய்வம் பாபா” ! பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமெரிக்காவில் வெளியீடு!!

சுவாமி சாய் ரவிச்சந்திரன் தயாரிக்கும் “கண்கண்ட தெய்வம் பாபா” ! பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமெரிக்காவில் வெளியீடு!!

மகாராஷ்டிரா மாநிலம் சீரடி மண்ணில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மகானாக வாழ்ந்து மறைந்து இன்று கடவுளாக வணங்கப்படும் மகான் சாய்பாபாவின் புகழ் தமிழ்நாட்டில் பரவியிருப்பதற்கு முக்கியமானவர்களில் ஒருவர் திருவண்ணாமலை சுவாமி சாய் ரவிச்சந்திரன். இவர் கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையில் அக்ஷய ஸ்ரீசாய் ஆலயம் என்ற கோவிலையும் கட்டி வழிபாடுகளை நடத்தி வருகிறார். சாய்பாபா கொள்கைகளில் ஒன்றான உணவை வீணாக்க கூடாது என்பதை மாபெரும் பிரச்சாரமாக மாற்றி ஐநா சபை வரை சென்று முறையிட்டு WORLD FEEDING DAY என்று பாபாவின் நினைவு நாளை அறிவிக்க கோரி போராடி வருகிறார்.

தற்பொழுது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாய்பாபாவின் புகழை பரப்புவதுடன் கோமாதா வழிபாட்டின் சிறப்புக்களையும் அவசியத்தையும் அமெரிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதற்கிடையே தனது சாய் தர்ஷன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் “கண்கண்ட தெய்வம் பாபா”என்ற திரைப்படத்தையும் அமெரிக்காவில் வாழும் சாய் பக்தர்களின் உதவியுடன் தயாரித்து இயக்குகிறார்.

“இதற்கு முன்பு பாபா பற்றி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவையெல்லாம் அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலான “சத்சரிதம்” என்கின்ற புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை தழுவியே எடுக்கப்பட்டது. ஆனால் இந்த படம் பாபாவின் பக்தர்கள் நிகழ்காலத்தில் சந்தித்த நேரடியான தெய்வீக ஆச்சரியங்களையும் அனுபவங்களையும் உள்ளடக்கிய படைப்பாக உருவாக்கப்படுகிறது. பிரபல நடிகர் நடிகைகளுடன் நடிக்க இருக்கும் இந்த படத்தில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல காட்சிகளை நேர்த்தியாக வடிவமைக்க உள்ளோம்.  ஜார்ஜியா அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பெண்மணி மீனாட்சி இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.  பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதி வெளியிட்ட பாபா இசை ஆல்பத்திற்காக எம் எஸ் விஸ்வநாதன் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் கார்த்திக் பாடியிருக்கும் பாடல்களை இந்த படத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். பிரபல தொழிலதிபர்கள் ரமேஷ் கூடே,  முஸ்தபா ஆகியோர் இனண தயாரிப்பாளர்களாக என்னுடன் கைகோர்த்து இருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்கிறார் படத்தை தயாரிக்கும் சாய் ரவிச்சந்திரன்.

“கண்கண்ட தெய்வம் பாபா” படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று அமெரிக்காவில் அட்லாண்டா மாநிலத்தில் உள்ள ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதில் தனியார் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி மகாலட்சுமி பிரியதர்ஷினி, அமெரிக்க வாழ் பாபா பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தங்கள் ஆன்மீக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தொடர்புக்கு: +91 9962 465988

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *