விறுவிறுப்பான திரைப்படம் போல சட்டமன்ற தேர்தல்! யாருக்கு வாக்களிப்பது? நடிகர் பார்த்திபன் கருத்து!!
வருகிற ஏப்ரல் 23 ம் தேதி )நாளை மறுநாள்)நடைபெற உள்ள 2026 தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு இன்றே கடைசி நாள்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி 233 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதாலும் தொடர்ந்து பரபரப்பாக பிரச்சாரம் செய்வதாலும் இந்த தேர்தல் மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு மற்ற அரசியல் கட்சிகளையும் கலக்கமடையச் செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் சட்டமன்ற தேர்தல் தொடர்பான தனது கருத்துக்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வணக்கம்!
இந்த சட்டமன்றத் தேர்தலை ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போலவே பார்க்கிறேன் அதுவும் 3 காட்சிகள் மட்டுமல்ல, எல்லாக் காட்சிகளையும் நான் மட்டுமல்ல எல்லா மக்களும் houseful ஆக street full ஆக road full ஆகப் பார்க்கிறார்கள் அப்படி full ஆகப் பார்க்கும் மக்களை FOOL ஆகப் பார்க்கும் அல்லது Fool ஆக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள் இத்திரைப்படத்தை action, comedy, thriller, suspense, horror, fiction இப்படி எல்லாம் கலந்த genre-ல் அவியல் கூட்டணி entertainment ஆகத் தருகிறார்கள். என்னைப் போன்ற நடுநிலைவாதிகள் சுவாரஸ்யமாக ஆனால் கவலையுடன் பார்க்கிறோம்.
மொய் விருந்துப் போல பொய் விருந்து படைக்கப்படுகிறது , அதன் மீது மொய்க்கும் ஈக்களாக மக்கள் மெய்யாகவே ஈர்க்கப்படுகிறார்களா? அல்லது மக்களும் அரசியல்வாதிகளை ஏமாற்றப் பார்க்கிறார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
நாளைய நாட்டை ஆளப்போவது தலைவர்கள் அல்ல, இன்றைய இளைஞர்களே! எனவே ………
மக்கள் வெற்றி பெற யாருக்கு ஓட்டளிப்பது? ஆனால்,
100 % வாக்குப்பதிவு நம் கடமை.
![]()

