தமிழ்நாட்டின் முதல் டால்பி விஷன் திரையரங்கம்: திருச்சியில் இன்று கமல்ஹாசன் திறந்து வைக்கிறார்!!

தமிழ்நாட்டின் முதல் டால்பி விஷன் திரையரங்கம்: திருச்சியில் இன்று கமல்ஹாசன் திறந்து வைக்கிறார்!!

தமிழ் நாட்டில் பல திரையரங்குகளில் டால்பி அட்மோஸ் சவுண்டு சிஸ்டம் உள்ளது. ஆனால் திருச்சி திருவெறும்பூரில் இன்று (ஏப்ரல் 20) கமலஹாசன் திறந்து வைக்கும் லே(LA) சினிமா வளாகத்தில் அமைந்துள்ள ஆறு ஸ்கிரீன்களில், ஸ்கிரீன் 4 வித்தியாசமான உயர் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது

Dolby Vision, Dolby Atmos Sound இணைந்த பிரீமியம் திரையரங்கம் இது.

இங்கு ஒளிக்காக Dolby Vision கொண்ட
இரண்டு Christie 4K RGB LASER (Exclusive Series for Dolby ) புரஜக்டர்களைப் பயன்படுத்துகின்றனர்.

இன்றைய தேதியில்
கருப்பு நிறத்தை துல்லியமாகக் காட்டும் ஒரே புரஜக்‌ஷன் டால்பி விஷன் தான். IMAX உட்பட மற்ற திரையரங்குகளில் சாம்பல் கலந்த கருப்பு நிறமே காட்டப்படுகிறது. மற்ற 4k புரஜக்‌ஷனில் படம் பார்த்திருந்தாலும், டால்பி விஷனின் 4k தரத்துக்குப் பக்கத்தில் கூட வர முடியாது என்கிறார்கள். முக்கியமாக சாதாரண திரையரங்க புரஜக்‌ஷனுடன் ஒப்பிடும்போது , இதன் காண்ட்ராஸ்ட் ரேஷியோ பல மடங்கு அதிகம். அதனால் எவ்வளவு இருளான காட்சிகளையும் தெளிவாகப் பார்க்க முடியுமாம்.

ஒலிக்கு…சாதாரண திரையரங்குகளில் Dolby Atmos பயன்படுத்தியிருந்தாலும், “டால்பி சினிமா” தியேட்டர்களில் இருக்கும் Dolby Atmos வகையே வேறு. சாப்ட்வேர், ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் டால்பியின் நவீன தயாரிப்புகள்தானாம். மற்ற திரையரங்குகளில் Dolby Processor மட்டும் வாங்கிவிட்டு மற்ற நிறுவனங்களின் ஸ்பீக்கர் களையும் உபயோகப்படுத்தலாம்.

இந்த வகை தியேட்டரில் ஸ்பீக்கர்கள் எதுவுமே வெளியில் தெரியாது. எல்லாமே மறைமுகமாக இருக்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும். சரவுண்ட் முறையில் இல்லாமல் 3டி முறையில் ஸ்பீக்கர்களும் இயங்கும். சவுண்ட் எவ்வளவு அதிகமோ, அதே அளவு துல்லியமாகவும் இருக்கும். திரையரங்க தொழில்நுட்பத்தில் பெஸ்ட் சவுண்ட் இதுதான் என்கின்றனர்.

light reflectionsஐ தவிர்ப்பதற்காக
திரையரங்கச் சுவர்கள், இண்டீரியர் முதல் இருக்கைகள் வரை எல்லாமே கருப்பு நிறத்தில் தான் இருக்கும். Auditorium அரைவட்ட வடிவில் (stadium seatings) அமைக்கப்பட்டிருக்கும்.

முக்கியமாக தயாரிப்பு (cinema production company) தரும் finalout DCP – DIGITAL CONTENT PACKAGE) யை தான் எல்லா தியேட்டர்களும் திரையிடுவார்கள். தயாரிப்பாளர் தரும் இறுதி வடிவமான DPX FILE வீடியோ பதிவுகளையும் சவுண்டு மிக்ஸிங் ன் இறுதி வடிவமான 5.1, 7.1, 9.1 டி டி எஸ் அல்லது டால்பி அட்மாஸ் ஒலியையும் இணணத்து உருவாக்கப்படுவது தான் DCP. முன்பு படச்சுருளில் இதை செய்து முடிக்கும் போது அதை MARRIED PRINT என்பார்கள். ஏனெனில் இதில் இருந்து பட க்காட்சிகளையும் சத்தத்தையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது.

இத்தகைய டால்பி திரையரங்குகளுக்காக தனியாக ஒரு டிஜிட்டல் பிரிண்ட் உருவாக்கப்படும். அது நவீன ஒளி ஒலி அமைப்புக்காக செய்யப்படுகிறது.

தற்போது இந்த டால்பி சினிமா தியேட்டர்கள் உருவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு பணியை இந்தியாவில் மேற்கொள்ளும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோ செய்து வருகிறது.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *