கோவையில் பரபரப்பு: டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கோவை சரக டிஐஜி விஜயக்குமார் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
பந்தயசாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.*
சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.