மெரினாவில் பேனா: எதிர்த்தவர் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

சென்னை மெரினா கடலில் கலைஞரின் பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு
உத்தரவிடக் கோரி
கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்திருக்கிறது.
இதுபோன்ற மனுக்களை பொதுநல மனுவாக
ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பொது நலனை கருத்தில் கொண்டு இந்த வழக்கு தாக்கலாகவில்லை. இது எந்த மாதிரியான மனு? என தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.