நாடு முழுவதும் கொண்டாட்டம்: பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு இந்திய நாடார் பேரமைப்பு மாலை மரியாதை! ராகம் சௌந்தர பாண்டியன் தலைமையில் ஊர்வலம்!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று( ஜூலை 15, 2023) விமரிசையாக கொண்டாடப்பட்டது. அமைச்சர்களும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் நாடார் சமுதாய தலைவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி காமராஜர் சிலைக்கு மாலை மரியாதை செய்து அன்னதானம் வழங்கி கொண்டாடினர். தமிழக அரசு கல்வித் திருநாளாக பள்ளிகளில் மாணவ மாணவிகள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடியது.
இன்று காலை இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில், தமிழ் நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர், கல்வி கடவுள் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121வது அவதார திருநாள் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பெருந்தலைவர் இல்லத்திற்கு, பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் செளந்திர பாண்டியன் தலைமையில் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்து வழிபட்டனர். பின்னர் 1500 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது பேசிய ராகம் சௌந்தரபாண்டியன் “தமிழக முதல்வர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்திருக்கும் கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்கிற முயற்சியை பாராட்டியும் பெருந்தலைவர் இல்லத்தினை சீரமைத்து நன்கு பராமரிக்க வேண்டும்” என்ற கோரிக்கையையும் வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன் , பொருளாளர் ஏஎம்டி.சிவகுமார் ,மாநில துணை செயலாளர் sss. சந்திரன், கௌரவ ஆலோசகர் S.Tபன்னீர்செல்வம் வியாபாரிகள் முன்னேற்ற அணி தலைவர் மாதவன், சுயதொழில் அணி தலைவர் தமயந்தி பன்னீர் செல்வம் , துணை தலைவர் மகேஸ்வரி பாலு, இளைஞரணி பொருளாளர் பாலமுருகன் இளைஞரணி துணை செயலாளர் நவகோட்டீஸ்வரன் தகவல் தொழிற்நுட்ப அணி செயலாளர் ரமேஷ் , வியாபாரிகள் முன்னேற்ற அணி துணை செயலாளர் வெங்கட்ராமன் ,வழக்கறிஞர் அணி துணை செயலாளர் கவிமணி,
வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன்,பொருளாளர் குமரன்,வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தென்சென்னை மாவட்ட தலைவர் ஆல்வின்,திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆர்தர், சேரன்,காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பாலன், இராயபுரம் பகுதி வியாபாரிகள் முன்னேற்ற அணி தலைவர் திரவியம்,ஆர். கே நகர் பகுதி தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ரவிராஜன்,வடசென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தியாகவேல், தலைமை அலுவலக அலுவலர் நா. சிவராஜ் திரைப்பட நடிகர் ராஜேந்திரநாத் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.