“லியோ” முதல் பாடல் 67 மில்லியன்: ஆகஸ்ட் 1ல் அடுத்த பாட்டு! விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் த்ரிஷா சஞ்சய் தத் கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் “லியோ” படத்தின் முதல் பாடல் “நான் ரெடி தான் வரவா… அண்ணன் தனியா வரவா….” கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது .
இந்த பாட்டு சுமார் 67 மில்லியன் பார்வையைப் பெற்று அசர வைத்திருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாடலில் விஜய் மட்டும் ஆட்டம் போட்டார். இரண்டாவது பாடல் விஜய்யுடன் கதாநாயகி திரிஷா இணைந்து ஆடுவது போன்ற பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.