“நூடுல்ஸ்” படம் ரசிகர்களை ஏமாற்றாது… பேசப்படும்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நம்பிக்கை!

“நூடுல்ஸ்” படம் ரசிகர்களை ஏமாற்றாது… பேசப்படும்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நம்பிக்கை!

ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கிய படம். தம்பி அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியிடுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது:

நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே கவனம் செலுத்தலாமே? எனக் கேள்வி கேட்டதுண்டு.

சிலருக்கு சினிமா மோகம். சிலருக்கு சினிமா தாகம்.

நமக்கு கொஞ்சம் தாகம் அதிகம். முரண்களைப் பார்த்தே வளர்ந்துவிட்டதால் முரண்களில் பயணப்படுவது பிடிக்கும்.

ஏழு கடல் ஏழு மலை, ராஜாகிளி, உயிர் தமிழுக்கு, வணங்கான் என பெரிய படங்களுக்கு நடுவே நூடுல்ஸ் என்ற சமூக பொறுப்புள்ள ஒரு படத்தின் மீதும் கண் விழுந்தது.

நிச்சயம் பார்ப்பவர்களை ஏமாற்றாது என்ற நம்பிக்கை வந்த பிறகே படத்தின் மீது கைவைத்தேன்.

இயக்கம், நடிப்பு என எல்லா பக்கமும் கைதேர்ந்து படைத்திருக்கிறார்கள் இந்த நூடுல்ஸை.

சிறிய படம்… சின்ன நடிகர்கள் என்பதை மீறி இப்படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மிக மிக அவசரம் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போன்ற தாக்கத்தை இப்படமும் ஏற்படுத்தும் என வலுவாய் நம்புகிறேன்.

பெரும் படங்களின் மார்க்கெட்டிங் கப்பல்களுக்கு நடுவே இந்த கிழித்துச் செல்லும் படகையும் களம் காண வைக்கிறோம்.

உங்கள் பேராதரவு எனும் காற்று வீசி எங்கள் படகை கரை சேர்ப்பீர்கள் எனும் பெரும் நம்பிக்கையுடன் செப்டம்பர் 8 -ல் திரைவருகிறோம்.

ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்யுங்கள். நன்றி…

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *