இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்க்கு தேசிய விருது! “பார்க்கிங்” படத்திற்கு 3 விருதுகள்!! ஷாருக்கான் சிறந்த நடிகர்; சிறந்த நடிகை ராணி முகர்ஜி!!!

2023 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று மாலை அறிவித்தது.
2023ஆம் ஆண்டிற்கான
சிறந்த தமிழ் படமாக
‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
‘பார்க்கிங்’ படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. சிறந்த திரைக்கதைக்காக இந்த படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு விருது கிடைத்திருக்கிறது.
தமிழில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்திற்காக 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு ஜி.வி.பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுஇருக்கிறார்.
பாலையா நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த தெலுங்குப் படமாக தேர்வு.
அட்லி இயக்கத்தில் உருவான ‘ஜவான்’ படத்துக்காக ஷாருக்கானும் ‘12th Fail’ படத்திற்காக விக்ராந்த்தும் 2023ஆம் ஆண்டிற்கான
சிறந்த நடிகர்கள் விருதை பெறுகின்றனர்.
‘உள்ளொழுக்கு’ மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு 2023ஆம்ஆண்டின் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘KATHAL’ படத்துக்கு சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காமெடியான கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி ’ படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு க்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சாட்டர்ஜி vs நார்வே’ இந்திப் படத்தில் நடித்த ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.