சிம்புவுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி? வெற்றிமாறனின் “அரசன்” அப்டேட்ஸ்!
பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக சிம்பு நடிக்கும் அதிரடி ஆக்சன் படம் அரசன். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்திருக்கிறார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, விடுதலை 2 படங்களில் கைகோர்த்த விஜய் சேதுபதி செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார்.
அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் கதை வட சென்னையின் பிரபல ரவுடி ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் தயாரிப்பாளரான தாணுவோ இயக்குனரோ ” இது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லவில்லை. சேதுபதியோ தன் கதாபாத்திரம் வலிமையானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
அப்படின்னா சிம்புவுக்கு சேதுபதி வில்லனாகத்தானே இருக்க முடியும்? எப்படி இருந்தாலும் “நடிப்பரசன்” யார் என்பதில் இருவருக்கும் கடும் போட்டி இருக்கப் போவது நிச்சயம்.
![]()

