ரஜினியை இயக்கப் போவது “டான்” டைரக்டர் சிபி சக்கரவர்த்தியா? “தலைவர் – 173 ” டீம் யார்? நாளை அறிவிக்கிறது ராஜ்கமல் நிறுவனம்!

ரஜினியை இயக்கப் போவது “டான்” டைரக்டர் சிபி சக்கரவர்த்தியா?  “தலைவர் – 173 ” டீம் யார்? நாளை அறிவிக்கிறது ராஜ்கமல் நிறுவனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்து அந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு உருவானது. முதலில் சுந்தர் சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் அவர் சொன்ன கதையின் கிளைமாக்ஸ் ரஜினிகாந்த்துக்கு பிடிக்கவில்லை என்பதால் சுந்தர் சி ப்ராஜெக்ட்டில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு கே எஸ் ரவிக்குமார், லோகேஷ் கனகராஜ் நெல்சன், வெங்கட் பிரபு, அஸ்வக் மாரிமுத்து, பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. இதனால் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி புதிய படத்தை அறிவிக்கும் திட்டம் தள்ளிக் கொண்டே சென்றது.

இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு “தலைவர் – 173″படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் ரஜினியை இயக்கப் போவது, சிவகார்த்திகேயன் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற “டான்” படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி என்ற தகவல் கசிந்திருக்கிறது. இருப்பினும் முறையான அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *