2040ல் நடக்கும் லவ் ஸ்டோரி LIK: எதிர் பார்ப்பை எகிறவைக்கும் பிரதீப்- விக்னேஷ் சிவன்- அனிருத் COMBO!!

2040ல் நடக்கும் லவ் ஸ்டோரி LIK: எதிர் பார்ப்பை எகிறவைக்கும் பிரதீப்- விக்னேஷ் சிவன்- அனிருத் COMBO!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் கிருத்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK), 2040-ல் நடக்கும் ஒரு கற்பனை அறிவியல் காதல் நகைச்சுவைத் திரைப்படமாம். யதார்த்தமான உண்மையான தெய்வீக காதலை விரும்பும் நாயகன் பிரதீப் ஹைடெக் தொழில்நுட்பத்தை நம்பும் நாயகியை காதலிப்பதும், இடையில் வரும் லவ் இன்சூரன்ஸ் நிறுவன சிக்கல்களுமே கதையாம்.

விஞ்ஞானம் விஸ்வரூபம் எடுத்து ஆடும் 2040-ல், காதலுக்கும் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கப்படுகிறதாம். எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மனிதர்கள் மனிதர்களை நம்பாமல் ஆஃப் (Application) நம்பி வாழும் உலகில் வித்தியாசமான அப்ளிகேஷன்ஸ்களை உருவாக்கி கலங்கடிக்கும் கிரியேட்டராக எஸ் ஜே சூர்யா மாறுபட்ட வேடம் ஏற்றிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இனணந்து பிரமாண்டமாக தயாரித்திருக்கின்றனர். உலகம் முழுவதும் ஏப்ரல் 10 ம் தேதி ரிலீஸாகிறது.

படத்தில் இடம்பெற்றுள்ள புதுமையான பொருட்கள் மாறுபட்ட உடைகள் வித்தியாசமான கார்கள் என்று கலர்ஃபுல்லாக உருவாக்கப்பட்டுள்ள காட்சிகளும் செட்டுகளும் , எப்போதும் இளமை துள்ள சிந்திக்கும் பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் அனிருத் கூட்டணியின் முதல் காம்போவும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *