அலங்காரத்தில் அய்யா வைகுண்டர் சாமி

சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள ஐயா வைகுண்டர் சாமி கோவிலில் ஞாயிறு தோறும் பிற்பகல் 12 மணிக்கு விமரிசையான அலங்காரத்துடன் ஆராதனை பூஜைகள் நடைபெறுகின்றன. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வரும் அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவை மதிய உணவு கோவில் நிர்வாகம் சார்பாக வழங்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பயனடைகின்றனர் வாரத்தின் செவ்வாய்கிழமை நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் பிரச்சினைகளுடன் வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கும் சொல்லப்படுகிறது. வருகிற அனைவருக்கும் ஐயாவின் நாம பிரசாதம் வழங்கப்படுகிறது.