பக்தர்கள் இல்லத்தில் எழுந்தருளும் அருள்மிகு தன்வந்திரி பகவான்: வாலஜாபேட்டை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு ஏற்பாடு! ஜூலை 27-ல் பெங்களூரில் தரிசனம்!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே அனந்தலை மதுராவில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு தன்வந்திரி பகவானை அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. உலகத்தோரின் பிணிகளை விரட்ட வேண்டும் என்பதற்காக இங்கே குடி கொண்டுள்ளார்.
இங்கே பிரதிஷ்டை ஆவதற்கு முன் பாரத தேசத்தின் பல புண்ணிய தலங்களுக்கு கரிக்கோல யாத்திரையாகச் சென்று திரும்பியவர் இந்த தன்வந்திரி பகவான். எண்ணற்ற புனித நதிகளில் நீராடி, புண்ணிய க்ஷேத்திரங்களில் பூஜைகள் கண்டவர். அத்தனை தலங்களின் தெய்வ சாந்நித்தியத்தைத் தன்னிடம் கொண்டவர் இந்த தன்வந்திரி பகவான்.
தவிர 93 உப சந்நிதிகளுடன் திகழும் ஆரோக்கிய பீடத்தில் அருள் பாலிப்பதால் இந்த தன்வந்திரி பகவானின் அருளாற்றல் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத ஒன்று. படைகள் கூடினால்தானே ராஜாவுக்கு வலிமை.
‘முன்பு பல பக்தர்களின் இல்லங்களுக்கும் எழுந்தருளியது போல் இப்போதும் எங்கள் இல்லங்களுக்கு தன்வந்திரி பகவான் உத்ஸவர் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்ய முடியுமா?’ என்ற கேள்வியைத் தற்போது பலரும் கேட்கிறார்கள்.
இப்படிக் கேட்பவர்களில் பலர் 70 வயதைக் கடந்தவர்கள். தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து பயணித்து ஶ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வர முடியாதவர்கள். மருத்துவர்களின் அறிவுரைப்படி இல்லத்தை விட்டு நகர முடியாதவர்கள், ஆசைகள் இருந்தும் அழைத்துச் செல்ல போதிய துணைகள் இல்லாதவர்கள்
இத்தகைய பக்தர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதற்காக ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளும் இதற்கு இசைவு தெரிவித்துள்ளார்கள்.
எனவே முதல் கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் வசிக்கும் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் அருள்மிகு தன்வந்திரி பகவானின் யாத்திரை வைபவம் அமையும்.
தங்கள் இல்லத்திலோ, தாங்கள் தீர்மானிக்கும் இடத்திலோ, தங்கள் குடியிருப்பிலோ, தங்கள் அலுவலகத்திலோ வாலாஜா அனந்தலை மதுரா அருள்மிகு தன்வந்திரி பகவான் எழுந்தருள வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள் வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தைத் தொடர்புகொள்ளலாம்.
உங்கள் இல்லத்தில் அருள்மிகு தன்வந்திரி பகவான் எழுந்தருளி, ஹோமங்களும் வழிபாடுகளும் நடக்க ஏற்பாடு செய்கிறோம்.
மேற்கண்ட தகவலை தன்வந்திரி குடும்பத்தினர், தெரிவித்தனர்.
தொடர்புக்கு: 94433 30203.