எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!!

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலை சுமார் 7 மணி முதல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்து உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு ராமலிங்கம் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள.- மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.