உணவு விநியோக தொழிலாளிகளுக்கு “அநீதி” படம் இலவச காட்சி: டைரக்டர் வசந்தபாலன் ஏற்பாடு!!

டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் துஷாரா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் நேற்று ரிலீசான “அநீதி” திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. டைரக்டர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிட்டிருக்கிறது.
இன்று இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்ட அறிக்கை:
அநீதி திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி பத்திரிகை மற்றும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நகரமெங்கும் பகலிரவாக இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுடைய வாழ்வை இந்த கதை தொட்டுச் செல்கிறது. ஆகவே உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கான ஒரு பிரத்யேக இலவசக் காட்சி நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நீங்கள் உணவு விநியோகிக்கும் தொழிலாளியாக இருப்பின் உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 8015136738
Thanks,
Vasanthabalan
&
Nikil Murukan
22.07.2023
Saturday