“காவாலா” பாடலுக்கு மும்பை ஏர்போர்ட்டில் ஆட்டம் போட்ட தமன்னா: வைரலாகும் வீடியோ!

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடல் “காவாலா…” கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இன்னும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கும் இந்த பாடல் 30 மில்லியன் பார்வையை பெற்று கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த பாடலில் தமன்னா படு கவர்ச்சியான உடையில் கிளர்ச்சியை தூண்டும் வகையில் போட்ட ஆட்டம் ரசிகர்களை கண்டபடி உசுப்பேற்றி உள்ளது. அதிலும் அனிருத் இசை என்றால் சொல்லவும் வேண்டுமா?
நீண்ட நாட்களுக்கு பிறகு தனது பாடல் ஒன்று சூப்பர் ஹிட்டடித்திருக்கும் உச்சத்தில் மிதக்கும் தமன்னா இன்று காலை வழக்கம் போல கவர்ச்சி உடையில் மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்தார். அப்போது அவரைப் பார்த்த சில புகைப்படக்காரர்களும் ரசிகர்களும் சூழ்ந்து கொண்டு “மேடம் காவாலா பாட்டுக்கு ஒரு ஆட்டம் போடுங்கள்” என்று வற்புறுத்தினர். ஒரு ரசிகர் ஆடவும் செய்தார். தமன்னாவும் கோவப்படாமல் அந்த ரசிகருடன் இணைந்து ஆட்டம் போட்டுவிட்டு அவரை கட்டிப்பிடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டு கிளம்பினார்.
இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் பற்றிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாட்டு ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பே அடுத்த பாடலா என்று ஆச்சரியத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.