கவிப்பேரரசு வைரமுத்து 70-வது பிறந்தநாள் : முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து!

கவிஞர் வைரமுத்து அவர்களின் 70-வது பிறந்தநாள் கவிஞர்கள்
திருநாளாக இன்று காலையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய பொன்மணி மாளிகையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் எஸ் ஜெகத்ரட்சகன் எம்பி, முன்னாள் எம்பி.
கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு “கவிஞர் திருநாள்” விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து கவிஞர் வைரமுத்து ஏற்புரை நிகழ்த்தினார். தமிழரசு நன்றி தெரிவித்தார். முன்னதாக வி பி குமார் அனைவரையும் வரவேற்றார். தமிழ் விருந்தை தொடர்ந்து அனைவருக்கும் தலைவாழை விருந்து பறிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் திரைப்படத்துறை சேர்ந்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு கவிஞருக்கு பொன்னாடை மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெற்றி தமிழர் பேரவை நிர்வாகிகள் மற்றும் பாஸ்கரன் செய்திருந்தனர்.
முன்னதாக இன்று காலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கவிஞர் வைரமுத்து வீட்டுக்கு சென்று கவிஞருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து மு க ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு: