தனுஷ், சூர்யா பட நாயகி: நடிகை “குத்து” ரம்யா மரணமா? போட்டோ வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி!

கன்னட திரை உலகில் பிரபலமான நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் தமிழில் சிம்பு ஜோடியாக “குத்து” படத்தில் ரம்யா என்ற பெயரில் அறிமுகமானார். அதிலிருந்து குத்து ரம்யா என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து தனுஷ் ஜோடியாக பொல்லாதவன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூரியா ஜோடியாக வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
கன்னட திரை உலகின் முன்னணி நடிகையான இவர் சில படங்களை தயாரித்திருக்கிறார். சில காலம் அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் போட்டியிட்டு பரபரப்பான அரசியல்வாதியாக வலம் வந்தார். சமீப காலமாக அரசியலிலும் சினிமாவிலும் சற்று ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை முதல் “திவ்யா மாரடைப்பால் திடீர் மரணம்” என்று சமூக வலைத்தளங்களிலும் இணைய இதழ்களிலும் செய்திகள் பரவியது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான ரசிகர்களும் அவருக்கு சோசியல் மீடியாக்களில் இரங்கல் தெரிவித்து வந்தனர். பெங்களூரில் உள்ள ரம்யா வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இந்த செய்தி சுவிட்சர்லாந்தில் சுற்றுலாவில் இருந்த ரம்யாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த
ரம்யா தன் தோழியுடன் ரெஸ்டாரண்ட் வந்து காபி குடிப்பது போன்ற போட்டோவை வெளியிட்டு “தான் ஜெனிவாவில் இருப்பதாகவும் தேவையில்லாமல் தன்னை பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்” என்றும் செய்தி வெளியிட்டு சோசியல் மீடியாக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சில மணி நேரம் ரசிகர்களை பதற வைத்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளதால் அவர்கள் நிம்மதியடைந்தனர்.