விஜய்யின் ‘லியோ’ படத்திற்கு 4 மணி காட்சி அனுமதி இல்லை: ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!!

விஜய் அர்ஜுன் சஞ்சய்தத் திரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் லலித்குமாரின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி இருக்கும் “லியோ” படம் அக்டோபர் 19ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பல மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
சமீப காலத்தில் “விஜய் தான் சூப்பர் ஸ்டார்” என்று சில நடிகர்கள் கொளுத்திப்போட்டதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் வசூல் ஓப்பனிங் நிலவரம் அனைத்தும் விஜய் படத்தின் சம்பளம் வசூல் ஓப்பனிங்குடன் ஒப்பிட்டு பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு பக்கம் சோசியல் மீடியாக்களில் லியோ படம் ஆயிரம் கோடி வசூலை தொடுமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் ரஜினியின் “ஜெயிலர்” படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகப்பட்டு உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. ஜெயிலர் படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனைகளை படைத்தது. அதை முறியடிக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் படம் என்றாலே ஓபனிங் சிறப்பாக இருக்கும். அதுவும் ரசிகர்கள் முதல் காட்சி பார்க்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் அதிகாலை நாலு மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் அதிகாலை 4:00 மணிக்கு மற்றும் 7:00 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு தமிழக அரசுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் காலை 9 மணி காட்சிக்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் லலித்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அதிகாலை 4 மணிக்கு மற்றும் 7 மணிக்கு சிறப்பு கட்சி திரையிட அனுமதிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிடக்கூறி வேண்டியிருந்தார்.
இன்று காலை இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அனிதா “காலை நாலு மணி காட்சிக்கு அனுமதி அளிக்குமாறு தமிழ்நாடு அரசாங்கத்திற்கு இந்த கோர்ட் உத்தரவிட முடியாது. ஏற்கனவே 9 மணி கட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏழு மணி காட்சியாக நடத்திக் கொள்ள அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு விண்ணப்பிக்கலாம். அதை அரசாங்கம் பரிசீலிக்கலாம்” என்று உத்தரவிட்டார்.
இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதும் அதிகாலை காட்சிக்காக காத்திருந்த விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நாலு மணி காட்சி பார்ப்பதற்காக கேரளா மற்றும் பெங்களூருக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஏற்பட்ட போட்டியால் விஜய்யின் லியோ படம் எத்தனை கோடி வசூல் செய்யப் போகிறது என்பதை அறிய ஒட்டுமொத்த திரையுலகமும் தமிழ்நாட்டு மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1100 திரையரங்குகளில் ( ஸ்கிரீன்ஸ்) சுமார் 900 தியேட்டர்களில் லியோ படம் திரையிடப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
தயாரிப்பாளர் தரப்பு 70% ஷேர் கேட்கின்றனர். திரையரங்கு உரிமையாளர்கள் 60% மட்டுமே தர முடியும் என்று சொல்லி வருகின்றனர். இது தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் முடிவுக்கு வரும் என்றும் அதன் பிறகே முன்பதிவு தொடங்கும் என்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிகின்றன.