நடிகை அமலா பால் 2-வது திருமணம்: காதலரை கரம் பிடித்தார்! வைரலாகும் புகைப்படங்கள்!!

நடிகை அமலா பால் 2-வது திருமணம்: காதலரை கரம் பிடித்தார்! வைரலாகும் புகைப்படங்கள்!!

 

மலையாளத்தில் ‘நீலத்தாமரா’ என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து அதிரடி காட்டினார். அதன் பின்னர் அவர் நடித்திருந்த மைனா திரைப்படம் அமலா பாலை ரொம்பவே பிரபலமாக்கியது. தனது கண்களால் ரசிகர்களை கிறங்கடித்த அமலா பால், கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

விஜய்யுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வத் திருமகள், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யாவுடன் வேட்டை, என படங்களில் நடித்திருந்தார். பின்னர் மார்க்கெட் குறைந்த போது, “ஆடை” படத்தில் நிர்வாணமாகவும் நடித்து அதிரடி காட்டினார். இதனிடையே இயக்குநர் எ.ஏல் விஜய்யை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அமலா பால், 2017ல் அவரை விவாகரத்து செய்துவிட்டு சிங்கிளாக சிறகடித்து வந்தார்.

விவாகரத்துக்குப் பின்னர் கவர்ச்சியில் தாராளம் காட்டி வந்த அமலா பால், வட இந்தியாவை சேர்ந்த ஒரு பாடகரை காதலித்தார். இந்த காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை…. இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு சுற்றுலா யோகா போன்றவற்றில் ஆர்வம் காட்டி வந்த அமலா பால் கடந்த மாதம் 26ம் தேதி தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருடைய நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய், அமலா பாலிடம் தனது காதலை தெரிவித்தார். அமலா பாலும் நண்பரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.

இதனையடுத்து இருவரும் ஜோடியாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில் இன்று கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில் ஷேர் செய்துள்ளனர்.

இரண்டு ஆன்மாக்கள், ஒரே பயணம்..” என ரைம்மிங்காக அமலா பாலுடன் திருமணம் ஆனதை இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார் ஜகத் தேசாய். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அமலா பாலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அமலா பாலின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த திருமணத்திற்கு திரையுலகைச் சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *