தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத் தேர்தல்: மீண்டும் தலைவராக கவிதா – பொருளாளராக ஒற்றன் துரை! செயலாளராக “கோடங்கி” ஆபிரகாம் வெற்றி!!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத் தேர்தல்:  மீண்டும் தலைவராக கவிதா – பொருளாளராக ஒற்றன் துரை!  செயலாளராக “கோடங்கி” ஆபிரகாம் வெற்றி!!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் 17ம் தேதி நடைபெற்றது.

தேர்தல் அதிகாரிகளாக மூத்த பத்திரிகையாளர் சபீதா ஜோசப், சிங்காரவேலுவும், தேர்தல் பார்வையாளராக வழக்கறிஞர் எழில் இனியனும் இவர்களுடன் பி ஆர் ஓ சங்க செயலாளர் ஜான் ஆகியோர் தேர்தல் பணியை செய்தனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணிக்கு முடிவடைந்தது.

இதுவரை நடை பெற்ற எந்த சங்க தேர்தல்களிலும் 100 சதவீத வாக்குகள் பதிவானதில்லை.

முதல் முறையாக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.

தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் போட்டியாளர்கள் முன்பு அறிவிக்கப்பட்டது.

மீண்டும் தலைவராக கவிதாவும், பொருளாளராக ஒற்றன் துரை சங்கரும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு பெற்ற நிலையில் மற்ற பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சங்க செயலாளராக கோடங்கி ஆபிரகாம் வெற்றி பெற்றார். இணைச் செயலாளராக உதய்குமார், துணைத்தலைவர்களாக பரத்குமார், விஜய் ஆனந்த் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

செயற்குழு உறுப்பினர்களாக ஹரிபாபு, சிவசங்கர், ஹரி , ஷாலினி, சதீஷ், ராஜீவ்காந்தி, சதீஷ்குமார், ராம், AMN நாகராஜ், பொற்கொடி, ஜெயக்குமார், கோபால் ஆகிய 12 பேர் செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ்கள் வழங்கினர்.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *