6 குழந்தைகளுக்கு அம்மாவாக கூட நடிப்பேன்.. தாயாக நடித்ததில் பெருமைப்படுகிறேன்.. ஐஸ்வர்யா ராஜேஷ்!

தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக, தனக்கு தகுந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர், காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு மாநில அரசின் விருதை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கில் ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்தில் 4 குழந்தைகளின் தாயாக நடித்தது குறித்து பேசி உள்ளார்.
அணில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படம் சங்கராந்திகி வஸ்துன்னம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று 300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தோடு வெளியான ராம் சரணின் கேம்சேஞ்சர், பாலகிருஷ்ணாவின் தாகு மகாராஜா ஆகிய படங்கள் வெளியான போதும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சங்கராந்தி வஸ்துன்னம் திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு முன்பாக கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி, ரிபப்ளிக் ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷூக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது சங்கராந்திகி வஸ்துன்னம் திரைப்படம் தான். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கேடேஷின் மனைவியாகவும் 4 குழந்தைகளின் அம்மாவாகவும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் பல படங்களில் நடிக்கம் வாய்ப்பு வரும் என எதிர்பார்த்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.
இந்நிலையில் அண்மையில் ஐஸ்வர்யா ராஜேஷ், 4 குழந்தைகளுக்கு தாயாக நடித்தது குறித்து பேசி உள்ளார். அதில், ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்தில் 4 குழந்தைகளுக்கு தாயாக நடித்தேன். ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ 2 எடுத்தால் 6 குழந்தைகள் அம்மாவாக கூட நடிப்பேன். குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல நடிகையாக இருக்க வேண்டும் என்றால் எந்த வேடத்திலும் நடிக்க வேண்டும். அத்தகைய வேடங்களில் நடிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை. தமிழில் பல படத்தில் குழந்தையின் அம்மாவாக நடித்து இருக்கிறேன் என்றார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், கருப்பர் நகரம், மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க ஆகிய தமிழ் திரைப்படங்களிலும், உத்தரகாண்டம் என்கிற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். இதில், விஷ்ணு விஷாலுடன் இவர் ஜோடி போட்டு நடித்த மோகன்தாஸ் திரைப்படத்தின் வேலைகள் முடிந்த பிறகு சில காரணங்களால் வெளியாகாமல் உள்ளது.