நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு நடிகர் சத்யராஜ் புகழஞ்சலி: ஒரே ஷாட்டில் மூன்று வித முகபாவனை காட்டக் கூடிய சிறந்த நடிகர்!!

மறைந்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஒரு மிகச்சிறந்த நடிகரும் எனது நெருங்கிய நண்பருமான கோட்டா சீனிவாசராவ் மறைவிற்கு அவருடைய குடும்பத்திற்கும் திரை உலகிற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நடிகன் தனித்தனியாக ஒரு படத்தில் வில்லனாக நடிக்கலாம். காமெடியனாக நடிக்கலாம். குணசித்திர வேடத்தில் நடிக்கலாம்.
இந்த மூன்று கேரக்டரையும் சேர்த்து ஒரே காட்சியில் கூட நடிக்க முடியும். ஆனால் ஒரே ஷாட்டில் இந்த மூன்று விதமான முக பாவனைகளையும் அவரைத் தவிர வேறு யாராலும் காட்ட முடியாது,” என்று கூறியுள்ளார்.
YOUTUBE LINK: