RB சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பு: “விஷால்-35” திரைப்படத்தின் பிரம்மாண்ட பூஜை! கதாநாயகி துஷாரா!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான “மதகஜராஜா” மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக உருவாகும் இத்திரைப்படத்தை பல வெற்றி படங்களின் தயாரிப்பாளரான ஆர் பி சௌத்ரி தனது சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 99 வது படைப்பாக பிரம்மாண்டமாக உருவாக்குகிறார்.
1990 ஆம் வருடம் விக்ரமன் இயக்கிய “புது வசந்தம்” என்ற திரைப்படத்தின் தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்த சூப்பர்குட் பிலிம்ஸ் பட நிறுவனம், தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்து திரை உலகுக்கு பெருமை சேர்த்தது.
இதுவரை தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் 98 திரைப்படங்களை தயாரித்திருக்கும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது திரைப்படமாக உருவாக உள்ள “விஷால்-35” படத்தை இயக்குனர் ரவி அரசு இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.
மதகஜராஜாவின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் நடிகர் விஷால் மற்றும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் இனைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தொகுப்பை NB ஶ்ரீகாந்த் கவனிக்க துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஷால் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.
விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜை இன்று காலை மிகப் சிறப்பாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, ஜீவா, தம்பி ராமையா, அர்ஜெய், இயக்குனர் வெற்றிமாறன், மணிமாறன், சரவண சுப்பையா, M சரவணன், மோகன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முதற்கட்டமாக45 நாட்கள் நடைபெற உள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.