இசைப்பயணத்தில் ‘சில்வர் ஜூப்ளி”: ஸ்ரீகாந்த் தேவா கொண்டாட்டம்!

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதையும் தனது பிறந்தநாளையும் சேர்த்து தி நகரில் உள்ள தனது ஸ்டுடியோவில் கேக் வெட்டிக் கொண்டாடினார். தேவா மற்றும் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் பின்னணி பாடகர் பாடகிகள் சினிமா மக்கள் தொடர்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை கூறினர்.
தற்போது ஜெய் நடிக்கும் ஒரு படம் உள்பட 3 படங்களுக்கு இசையமைத்து வரும் ஸ்ரீகாந்த் தேவா விரைவில் தனது 125 வது படத்தை அறிவிக்க இருக்கிறாராம்.