காமராஜர் மீது அவதூறு: அடங்காத முக்தார் ; அடைக்கலம் தரும் திமுக! கொந்தளிக்கும் நாடார் சமுதாயம் என் ஆர் தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!!
“பெருந்தலைவர் மக்கள் கட்சி , நாடார் சங்கங்கள் மற்றும் அனைத்து நாடார் அமைப்புகள் இணைந்து, காமராஜரை இழிவு படுத்திய முட்டாள் முக்தாரை காவல் துறையினர் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் என் ஆர் தனபாலன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 22 ம் தேதி(இன்று) திங்கட்கிழமை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே காலை 10 மணி முதல் 12 மணி வரை நடத்துகின்றனர்.
சமுதாய பெரியோர்கள், சமுதாய சொந்தங்கள், நாடார் உறவின் முறை நிர்வாகிகள்,நாடார் சங்க நிர்வாகிகள், சமுதாய இளைஞர்கள்,காமராஜரின் பற்றாளர்கள், காமராஜரின் விசுவாசிகள்,
காமராஜரின் பக்தர்கள்
அனைவரும் அலைகடலென திரண்டு வாருங்கள். இழிபிறவி முக்தாரை கைது செய்யும் வரை போராடுவோம்…
ஒன்று படுவோம்.வென்று காட்டுவோம்.அனைவரும் வாரீர் வாரீர்”
என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில தலைமை நிலைய செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
சமூக விரோதி முக்தார் அகமதுவை கைது செய்ய வலியுறுத்தி மூன்று வாரங்களுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் நாடார் மகாஜன சங்கம், தமிழ் நாடு நாடார் சங்கம், மும்பை நாடார் சங்கம் உள்ளிட்ட நாடார் அமைப்புகள் பெரும் போராட்டம் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் கொடும்பாவி எரிப்பு என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு காவல் நிலையங்களில் முத்தர் மீது புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் எதற்கும் செவிசாய்க்காத மாநில அரசு, முக்தார் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு பதிலாக போலீஸ் பாதுகாப்பு கொடுத்து பாதுகாத்து வருகிறது. பிரச்சினையின் தீவிரத்தை முதலமைச்சர் உணரவில்லையா என்று கொந்தளிக்கும் நாடார் சமுதாயம் மக்கள் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியாக கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
![]()

