அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மத்திய தொகுதியில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான சுந்தர்.சி வேட்பாளராக களம் இறங்குகிறார். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தலைவர் ஏசி சண்முகமும் சுந்தர் சியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு தொகுதிக்கான வேட்பாளர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும், அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என புதிய நீதிக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி யின் மனைவியான நடிகை குஷ்பு பாஜக வில் முக்கிய பிரமுகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *