ரஜினியின் “ஜெயிலர் 2” படப்பிடிப்பு நிறைவு! ஜூன் மாதம் ரிலீஸ்!!

ரஜினியின் “ஜெயிலர் 2” படப்பிடிப்பு நிறைவு! ஜூன் மாதம் ரிலீஸ்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் “ஜெயிலர் 2 “என்ற பெயரில் உருவாகி வருகிறது. சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்ற படபிடிப்பு நேற்று நிறைவு பெற்றது. இதை ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் படக் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த படத்தில் மோகன்லால் எஸ் ஜே சூர்யா சிவராஜ் குமார் தமன்னா வசந்த் ரவி மிர்னா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். அதிரடி ஆக்சன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் ஓடிடி ரைட்ஸ் மட்டும் ரூபாய் 160 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படம் ஜூன் 12ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *