இளசுகளின் இதயங்களை கவர்ந்த ரியோவின் “ஜோ”: 25 நாளில் ரூ.7 கோடி வசூலித்து வெற்றி நடை! தயாரிப்பாளர் அருளானந்து பெருமிதம்!!

இளசுகளின் இதயங்களை கவர்ந்த ரியோவின் “ஜோ”:  25 நாளில் ரூ.7 கோடி வசூலித்து வெற்றி நடை!  தயாரிப்பாளர் அருளானந்து பெருமிதம்!!

வருடத்திற்கு சுமார் 300 படங்கள் ரிலீஸ் ஆகும் தமிழ் திரை உலகில் 10 சதவீதம் படங்களே வெற்றி

பெற்று வசூலை வாரிக் குவிக்கின்றன. அதிலும் முன்னணி கதாநாயகன் கதாநாயகிகளின் படங்களே முந்திக் கொள்கின்றன.

புது முகங்கள் நடிக்கும் அல்லது புதியவர்கள் இயக்கும் படங்கள் பெரும் வெற்றியை பெறுவது சற்றே கடினம் தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கல்லூரி காதல் கதையான “ஜோ” திரைக்கு வந்தது. சின்னத்திரையில் பிரபலமாகி பெரிய திரையில் நாயகனாக அடி எடுத்து வைத்து தடுமாறிக் கொண்டிருந்த ரியோ வின் திரைப் பயணத்தை ஸ்டெடியாக்கி இருக்கிறது “ஜோ” வின் வெற்றி. இதில் நாயகியாக அறிமுகமான மாளவிகாவும் இளைஞர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார். ஹரிஹரன் ராம் எழுதிய இயக்கிய இந்த படத்தில் சித்துகுமாரின் இசையும் பேசப்பட்டது. பாடல்கள் மனதை மயக்கியது.
தன் முதல் படமாக விஷன் ஹவுஸ் சார்பில் டி. அருளானந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். தரமான படங்களை வெளியிடுவதில் தடம் மாறாமல் பயணிக்கும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் இந்த படத்தை ரிலீஸ் செய்தார்.

தொழிலதிபர் அருளானந்து திரைப்படத்துறைக்கு புதியவராக இருந்தாலும், ஒரு நல்ல படத்தை தயாரிப்பது மட்டுமல்ல அதை மிகச் சரியாக விளம்பரப்படுத்தி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணமாகவே மாறி இருக்கிறார் இவர்.

தயாரிப்பாளரிடம் பேசியபோது, ” ஒரு படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் இயக்குனர் தான். மக்களின் ரசனையை புரிந்து கொண்டு அவர்களுக்கு பிடிக்கும் வகையில் படத்தை எடுப்பது இயக்குநர் தான். அவர் படத்தை நன்றாக எடுத்துக் கொடுத்ததால் தான் என்னால் அதை வெற்றி படமாக்க முடிந்தது. வெறும் விளம்பரம் மட்டுமே வெற்றியை கொண்டு வந்து விடாது. மூன்றாவது வாரத்தில் 120 தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே கேரளாவில் 50 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தோம் அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது 25 வது நாளை கடந்து வெற்றிகரமாக 90 தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 6. 75 கோடி வசூல் செய்திருக்கிறது.

இந்த நேரத்தில் “ஜோ” பட குழுவினருக்கும் நான் அனுப்பிய படம் பற்றிய தகவல்களை நல்ல மனதுடன் பகிர்ந்து கொண்டு வெற்றிக்கு வித்திட்ட எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த தயாரிப்பான “கோழிப்பண்ணை செல்லதுரை” படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் என் மகன் ஏகன் கதாநாயகனாக நடிக்க ஜோடியாக நடிக்கிறார் “இரவின் நிழல்” புகழ் பிரிகிடா”
என்று பெருமிதத்துடன் பேசினார் அருளானந்து.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *