சூர்யாவின் “அஞ்சான்” நாளை ரீ ரிலீஸ்: “36 நிமிடங்கள் வெட்டு; ட்ரோல் செய்தவர்களுக்கு அடிக்குமா ரிவிட்டு? அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார் டைரக்டர் லிங்குசாமி!!
ஆனந்தம் ரன் சண்டக்கோழி பையா வேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர் லிங்குசாமியின் அஞ்சான் படம் நவம்பர் 28 ஆம் தேதி ஏராளமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு சூர்யா சமந்தா நடிப்பில் யுவன் சங்கர் ராஜாவின் துள்ளல் இசையில் சுபாஷ் சந்திர போஸின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு காரணம் படத்தின் ப்ரோமோஷன் சமயத்தில் இயக்குனர் லிங்குசாமி படத்தின் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையின் காரணமாக பேசிய சில வார்த்தைகளை சூர்யாவை விரும்பாத சோசியல் மீடியாகாரர்கள் பெரிய அளவில் ட்ரோல் செய்து அதன் வெற்றியை தடுத்து விட்டனர். 
யுவன் சங்கர் ராஜா இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி பல மில்லியன் ரசிகர்களை சென்றடைந்திருக்கிறது. சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் மிக நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும். சூர்யா ரசிகர்களுக்கும் டைரக்டருக்கும் பிடித்த இந்த படத்தின் வசூல் தடுமாற்றம் இயக்குனரை வேதனைப் பட வைத்தது.
இப்போது பல முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் ஆவதும் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக வசூல் செய்வதும் தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் லிங்குசாமி தனது எடிட்டர் ஆண்டனி உள்ளிட்ட பட குழுவினருடன் அமர்ந்து மீண்டும் மீண்டும் படத்தைப் பார்த்து படத்தின் 36 நிமிடங்களுக்கு கத்திரி போட்டு விட்டார். இப்போது படம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடுகிறது. பட குழுவினர் மட்டுமல்லாமல் நடிகர் சிவகுமார் உள்ளிட்ட சூர்யா குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் நெருங்கிய நண்பர்களுக்கு சிறப்பு கட்சி போட்டு காட்டி அவர்களிடம் கருத்துக்களையும் கேட்டு அதன் பிறகே ரீ ரிலீஸ் செய்கிறார்களாம்.
படத்தைப் பார்த்த அனைவரும் “அஞ்சான் இப்போது எடுக்கப்பட்ட புதிய படம் போலவே இருக்கிறது. அந்த பிரம்மாண்டங்களும் காட்சிகளில் தெரியும் அழகியலும் பின்னணி இசையும் படத்தை பரபரக்க வைக்கிறது. எனவே நிச்சயமாக திரையரங்குகளில் சூரியா ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைவரையும் ரசிக்க வைக்கும் என்கிறார்கள். 
அப்போது படத்தை ட்ரோல் செய்தவர்கள் இப்போது பார்த்தால் நிச்சயமாக பாராட்டுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் லிங்குசாமி.
ரீ எடிட்டிங் செய்யப்பட்ட அஞ்சான் கொடுத்த உற்சாகத்தில் தனது அடுத்த இன்னிங்ஸை அதிரடியாக ஆரம்பிக்க தயாராகிவிட்டார் லிங்குசாமி. இம்முறை பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். காந்தாரா படத்தில் இளவரசியாக நடித்து காந்தம் போல ரசிகர்களை கவர்ந்திழுத்த ருக்மணி வசந்த் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருக்கிறார். லிங்குசாமியின் வெற்றி வேட்டை தொடரட்டும்.
![]()

